ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் தமிழ் இளைஞர் சூட்டுக்கொலை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளைது.
தென் அமெரிக்கா அருகில் உள்ள ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், லீ ஹை ரோடு (Lee High Road) என்ற இடத்தில், தமிழகத்தை சுபாஷ் அமிர்தராஜ் என்பவர், ஜேகே ஃபுட் (JK Food) சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
நேற்று (டிசம்பர் 18) ஜமைக்கா நேரப்படி மாலை 3 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்ளையடிப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை மிரட்டி பொருட்களை கொள்ளையடிப்பதும், துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதும் பதிவாகியுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது காயமடைந்த இளைஞர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை பதை பதைக்க வைக்கிறது. இந்நிலையில் நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.