கனடாவில் செந்தி செல்லையாவுக்கு தமிழர் தகவல் விருது
புலம் பெயர்ந்த கனடிய தமிழர்களிற்கு விருது வழங்குவதை அறிமுகம் செய்த நிறுவனங்களில் முதன்மையானது மூத்த பத்திரிகையாளர் திருச்செல்வம் அவர்களுடைய தமிழர் தகவல் நிறுவனம்.
30 ஆண்டுகளிற்கு மேலாக பல ஜம்பவான்களிற்கும் , வித்தகர்களிற்கும் விருதை வழங்கி கௌரவம் செய்து பெருமை கொண்டது தமிழர் தகவல் நிறுவனம்.
கனடிய மண்ணில் 3 தசாப்தங்களிற்கு மேலாக பல்துறைகளிலும் சேவைகளிலும் ஆக்கமுயற்சிகளிலும் தமிழன் வழிகாட்டியாக அடையாளம் காணப்பட்ட செந்தி செல்லையா அவர்கள் தமிழர் தகவல் விழாவில் வணிகத்துறை முன்னோடி விருதுடன் தங்க பதக்கம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டார்.
வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு தமிழர் தகவல் விருதினை காணிக்கையாக்குதாக தமிழன் வழிகாட்டி செந்தி தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய “செயல்வீரர்” பட்டம், கனடா முழுவதிலுமாக வழங்கப்பட்ட Top25 Canadian Immigrant விருது, கனடிய வர்த்தக சம்மேளனம் வழங்கிய விருது, பல்கலாச்சார பத்திரிகை நிறுவனம் வழங்கிய விருது என பலவிருதுகள் கிடைத்த போது உள்ள மகிழ்ச்சி போன்று இன்னும் பணிகள் தொடர்வதற்கு கிடைத்த அங்கீகாரமாக தமிழர் தகவல் விருதும் அமைந்துள்ளது என தமிழன் வழிகாட்டி செந்தி தெரிவித்துள்ளார்.
மேற்படி விழா ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் சபா பீடத்தில் 30 - 07 - 2022 அன்று நடைபெற்றது .