சவுதி அரசை சமுக வலைதளத்தில் விமர்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
சவுதி அரேபிய அரசாங்கதிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஓய்வுப் பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியரான முகமது அல் காம்தி என்பவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெறும் 9 பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

அதில் அரசாங்கதிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு ஜூலை 2023-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஒகஸ்ட் மாதம், மரண தண்டனையை ரத்து செய்ததது.

இதனைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இணையத்தில் இதே போன்ற விமர்சனங்களுக்காக காம்தியின் சகோதரர் ஆசாத் அல்-காம்டிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.