சொல்லாமல் மறைத்தார்கள்... கத்திக்குத்தில் இறந்த பள்ளி மாணவனுக்காக கதறும் கனேடிய தாயார்
ரொறன்ரோ உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கத்திக்குத்தில் பலியான சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என அவரது தாயார் கதறியுள்ளார்.
North York-ல் அமைந்துள்ள விக்டோரியா பார்க் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கெ மேல் சுமார் 3 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் படுகாயமாடைந்த 15 வயது மாணவன் Maahir Dosani மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மாஹிர் தோசானி தொடர்பில் அவரது தாயாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
பள்ளி நேரம் முடிந்தும் வீடு திரும்பாத நிலையில், தோசானியின் மொபைலுக்கு அவர் தொடர்பு கொண்டுள்ளார். பொதுவாக உடனையே அழைப்பை ஏற்று பேசும் தோசானி, செவ்வாய்க்கிழமை பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து பதறிப்போன அவரது தாயார் உடனையே, தோசானியின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அவர்களே, தோசானி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட தகவலை தமக்கு தெரிவித்ததாக, அந்த தாயார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, முன்னெடுத்த விசாரணையில், சிறுவன் தோசானி சன்னிபுரூக் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. உடனையே மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.
தமது மகன் இறந்துள்ள தகவல் கேட்டு கதறிய அவர், பள்ளியில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரொறன்ரோ மாவட்ட பள்ளி நிர்வாகம், கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், தோசானி உட்பட மூவர் காயமடைந்ததாகவும், எஞ்சிய இருவர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 மாணவர்கள் திரண்டு பள்ளி வளாகத்தில் வெளியே திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதில் யாரோ ஒரு மாணவர் காயம்பட்டு கீழே சரிந்ததும் எஞ்சிய மாணவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் 19 வயது Ahmed Rafin எனவும், முன்னாள் மாணவர் எனவும் தெரிய வந்துள்ளது.
தற்போது அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார்.