கனடாவில் படகு எரிந்து சேதமாகியதில் சிறுவன் காயம்
கனடாவின் டர்ஹாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு படகு எரிந்து சேதமாகியதில் ஒரு சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
டர்ஹாம் பிராந்திய பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணியளவில் டொராண்டோவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் கிழக்கே உள்ள கோர்ட்டிஸ் ரோட்டின் தெற்கு முனையில் ஒரு படகு எரிவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவயது ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
படகில் இருந்த மற்றொரு பெரியவர் சிறிய காயங்களை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த படகு விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.