ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொலைபேசி வழியான மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களை போன்று தொலைபேசியில் உரையாடி நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலைய இலக்கத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவது போன்று ஏற்படுத்தப்படுவதாகவும் உண்மையில் அவ்வாறு அழைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிலர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதாகவும் இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.