சிங்கப்பூர் கப்பல் மீதான தாக்குதலால் மீண்டும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய 'எவர் லவ்லி' என்ற கப்பலை ஈரான் இராணுவம் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலானது,ஓமானின் தாஹித்துறை முகத்திலிருந்து சுமார் 7.5 கடல்மைல் தென்கிழக்கில், கப்பலின் வலது புறத்தில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கப்பலின் மேல்தளம் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தாக்குதலின் போது விமானத்தில் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை தாங்கள் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹோர்மூஸ் நீரிணையை கடக்காமல் பல்வேறு கப்பல்கள் பின்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது