முதலில் ஊதியமற்ற விடுப்பு... பின்னர் வேலை பறிப்பு: 2000 TTC ஊழியர்கள் சிக்கலில்

vaccination employees termination TTC
By Arbin Oct 17, 2021 09:53 AM GMT
Report

நவம்பர் 20ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக TTC நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் நடவடிக்கையானது, 2021 இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என்றே TTC நிர்வாகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 30ம் திகதிக்கு முன்னர் TTC ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் அளித்து, ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 600 ஊழியர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை TTC நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்காத ஊழியர்களை ஊதியமற்றவர்கள் பட்டியலில் சேர்க்க இருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் அவர்கள் வேலை பறிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர்கள் மீது இவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்வது என்பது வருந்தத்தக்க செயல் என்றே TTC தெரிவித்துள்ளது. சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சேவையை TTC மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை எனவும் நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. செயற்பாட்டில் உள்ள 15,061 ஊழியர்களில் 85 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக TTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் 2,000கும் அதிகமான ஊழியர்கள் இதுவரை தடுப்பூசி தொடர்பில் தங்கள் நிலை குறித்து வெளிப்படுத்தவில்லை எனவும், நவம்பர் 21ம் திகதிக்கு பின்னர் இவர்கள் அனைவரும் ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் TTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வேலை நேரத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை TTC முன்னெடுக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது. ஆனால் TTC நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US