பாடசாலையில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல்!
நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீர் பிரதேச அந்தநாக் பகுதியில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு புலம்பெயர் தொழிலாளிகள் காயமடைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் பிரதேச பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நேபால் நாட்டை சேர்ந்தவர் எனவும் குறித்த பிரதேசத்தில் தொழில் வாய்ப்பிற்காக வசித்து வருவதாகவும் அறியப்பட்டுள்ளது.
இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் பிரதேச வாசிகள் அல்லாத நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.