கனடிய பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தைப்பொங்கலை முன்னிட்டு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனடாவிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அறுவடைத் திருவிழாவென்று அறியப்படும் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.
தைப்பொங்கலின் போது அமோக விளைச்சலுக்கு நன்றி பாராட்டுவதற்கும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றுகூடுவார்கள்.
மகிழ்ச்சி, அமைதி, சமூகம் ஆகியவற்றுக்கான இந்தக் காலத்தில் பொங்கல் பொங்கப்படும் அரிசியும் பாலும் சேர்ந்த பாரம்பரிய உணவான பொங்கல் நல்வாய்ப்புக்கும், எதிர்வரும் ஆண்டின் செல்வச் செழிப்புக்கும் குறியீடாக விளங்கும். கனடாவில் ஜனவரி மாதம் மரபுத் திங்களாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
தமிழ் கனடியர்களின் செழிப்பான வரலாறு, மீண்டெழும் தன்மை, வலிமை என்பன குறித்து சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எம் அனைவருக்கும் வழங்குகின்றது.
மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகங்களில் ஒன்று கனடாவில் உள்ளது. அதன் தொடரும் பங்களிப்பு, பன்முகத்தன்மை மேலும் அதிகமானதும், மேலும் செல்வச் செழிப்பானதும், மேலும் அதிகம் அனைவரையும் உள்ளடக்கியதுமாக கனடாவை மாற்றுவதற்கு உதவுகின்றது.
தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் கனடிய அரசின் சார்பாக மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இனிய தைப்பொங்கல் வாழ்துகள் என பிரதமர் ட்ரூடோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.