சவப் பெட்டிக்குள் கேட்ட சத்தம் : நிறுத்தப்பட்ட தகனம்
தாய்லாந்தின் பாங்கொக்கின் புறநகர் பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவர் தகனம் செய்யப்படவிருந்த தருணத்தில் உயிர் பிழைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பாங்கொக்கின் நொந்தபுரியில் உள்ள வாட் ராட் பார்கொங் தாம் பௌத்த ஆலயத்தில் இறந்ததாக நினைக்கப்பட்ட 65 வயது பெண், தகனம் செய்ய சில நிமிடங்களுக்கு முன் பெட்டிக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
பெட்டியிலிருந்து மெல்ல ஒரு தட்டும் சத்தம் கேட்டதாகவும் பெட்டியை திறந்து பார்த்த போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் இருந்தார் எனவும் ஆலய மேலாளர் பெய்ராட் சூட்தூப் தெரிவித்துள்ளார்.

சகோதரி கடந்த இரண்டு ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்தார் எனவும் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது சனிக்கிழமை மூச்சு நின்றது போல தோன்றியதால் அவர்கள் மரணமென எண்ணியதாகவும் குறித்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் தாய்லாந்தின் பித்தான்லுக் மாகாணத்திலிருந்து, சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தகனத்திற்காக பயணம் செய்திருந்தனர். குடும்பத்திடம் மரணச் சான்றிதழே இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த விவரத்தை விளக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், பெட்டிக்குள் இருந்து தட்டும் சத்தம் கேட்டதாக ஆலய பிரதானி தெரிவித்துள்ளார்.
பெண் உயிருடன் இருப்பது உறுதியானதும், ஆலதான பிரதானி உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
பெண் மிகக் குறைந்த இரத்த சர்க்கரை நிலை, காரணமாக உயிரிழந்தது போலத் தோன்றும் நிலையில் இருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூச்சுத் தடை அல்லது மூளை செயலிழப்பு ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.