இன்று முதல் போர் நிறுத்தம்; தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம் கைச்சாத்து
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்தானது.
தாய்லாந்து சார்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் (Nathaphon Narkphanit) மற்றும் கம்போடியா சார்பாக டீ செய்ஹா (Tea Seiha) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் விடுத்த கூட்டு அறிக்கையில், இன்று நண்பகல் முதல் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் போர்ச் சூழல் காரணமாக சுமார் 101 பேர் உயிரிழந்தனர்.
அதோடு, இரு தரப்பிலும் சேர்த்து ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.