நன்றி தெரிவித்த மன்னர் சார்ள்ஸ்
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் சார்ள்ஸ் (King Charles III )நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதாவது, கடந்த பத்து நாட்களாக, இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த இரங்கல் மற்றும் ஆதரவு தொடர்பான பல செய்திகளால் நானும் எனது மனைவியும் மிகவும் ஆதரவு அடைந்தோம்.
அத்துடன் லண்டன், எடின்பர்க், ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில், எனது அன்பான தாய் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுடோம்.
நாம் அனைவரும் எங்களுடைய இறுதிப் பிரியாவிடையைச் சொலுத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த துயரச் சமயத்தில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் எனவும் மன்னர் சார்ள்ஸ் (King Charles III ) தெரிவித்துள்ளார்.