இன்று அதிகாலை ஜேர்மன் பேர்லின் நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம்!(Photos)
ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் ஹோட்டலிலிருந்து பெருமளவு நீர் கசிந்ததன் காரணமாக அருகிலுள்ள வீதியொன்று மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களின் தொட்டி
பேர்லின் நகர மத்தியிலுள்ள ரெடிசன் ப்ளூ ஹோட்டலில் (Radisson Blu hotel) இந்த பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களின் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. உருளைவடிவமான இம்மீன் தொட்டிக்கு அக்வாடோம் (AquaDom) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
Emergency services still on site at the Radisson hotel where the burst aquarium is located. Apparently the water from the tank is now underground. #berlin #breakingnews pic.twitter.com/93rTNLlAJa
— Anna Saraste (@AnnSaras) December 16, 2022
சுமார் 16 மீற்றர் (52 அடி) உயரமான இக்கண்ணாடித் தொட்டி ஒரு மில்லியன் லீற்றருக்கும் அதிகமான லீற்நீரைக் கொண்டிருந்ததுடன், அதில் சுமார் 1500 மீன்கள் வளர்க்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை 5.50 மணியளவில் இம்மீன்தொட்டி உடைந்ததனால் ஹோட்டலிலிருந்து லட்சக்கணக்கான லீற்றர் நீர் ஹோட்டலிலிருந்து கசிந்து வெளியேறியது.
மேலும் வீதியில் பெருமளவு நீர் புகுந்ததால், நிலைமையைக் கட்டுப்படுததுவத்றக நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக பேர்லின் தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது.