பிரித்தானிய மன்னர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம்!
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அரச தம்பதியினர் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (18) அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செல்கின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கு வருவது இதுவே முதல் முறை
இன்று (18) மாலை முதல் எதிர்வரும் புதன்கிழமை (23) வரை பிரித்தானிய மன்னரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் குடும்ப வன்முறை போன்ற வெளிப்படையான “அரசியல் அல்லாத” பிரச்சினைகள் தொடர்பில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும்.
ஒக்டோபர் 21 மற்றும் 26 க்கு இடையில் சமோவா தலைநகர் அபியாவில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். அதேவேளை 75 வயதான மன்னரின் தொடர்ச்சியான புற்றுநோய் சிகிச்சையின் பின்னை இந்த பயணம் அமைந்துள்ளது.
மேலும் அரியணை ஏறிய பிறகு சார்லஸின் முதல் அவுஸ்திரேலிபய் பயணம் இதுவாகும்.
இந்நிலையில் பிரித்தானிய அரசர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு வருவது இதுவே முதல் முறை என்பதாலும் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.