கனடாவிற்கு 600 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்!
கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சிப் வில்சன்(Chip Wilson), உலக பணக்காரர்களின் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.
மேலும் விளையாட்டுத்துறை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமான லுலுலெமோன் அத்லெடிகா மூலம் உலக நாடுகளில் வணிகம் செய்து வருகிறார்.
இதையடுத்து கனடாவின் மேற்கில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அழிந்து வரும் வனப்பகுதிகளை காப்பாற்றுவதற்காக தொழிலதிபர் சிப் வில்சன்(Chip Wilson) 600.47 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த நன்கொடையின் மூலம் வனப்பகுதியை பாதுகாக்கவும், மற்றும் பூங்காக்கள் அமைத்து வனப்பகுதியை சுற்றுலா தளமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை வனப்பகுதிகளை பாதுகாப்பதற்காக தனியார் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடைகளில் சிப் வில்சன் (Chip Wilson)வழங்கிய 600 கோடியே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.