பிரான்ஸில் தந்தையை கொலை செய்த மகள்! தாய்யையும் விட்டு வைக்கவில்லை!
பிரான்ஸில் தந்தையை கொலை செய்து விட்டு தாயை கொலை செய்ய முயற்சித்த மகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தெற்கு பிரான்ஸ் நகரமான Perpignan பகுதியில் நேற்று நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதான இளம் பெண் ஒருவர் பேர்பின்நன் மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோரை பலமுறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 70 வயதான தந்தை உயிரிழந்த நிலையில் 66 வயதான தாய் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தையடுத்து குறித்த 28 வயதான பெண் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக மன ரீதியான பாதிப்பிற்குள்ளாகியிருந்ததாகவும், அவர் தனது சிகிச்சைகளை நீண்ட நாட்களுக்கு முன்னர் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தற்போது தனது தாயாருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் இரண்டு மாத குழந்தையும் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குழந்தையும் படுகாயமடைந்திருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வீட்டை சோதனையிட்ட பொலிஸார் தந்தையை கொலை செய்த கத்தியும் சம்பவ இடத்தில் இருந்து மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.