ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜப்பானின் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30க்கு உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜப்பானை உலுக்கிய 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் இஷிகாவா (Ishikawa) மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்தன. ஜப்பானின் மேற்குக் கரைப் பகுதியில் ஒரு மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் எழுந்தன.
உயிரிழந்த பாதிப் பேர் வாஜிமா (Wajima) நகரைச் சேர்ந்தவர்கள்
இதனையடுத்து கரையோரக் குடியிருப்பாளர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் பாதிப் பேர் வாஜிமா (Wajima) நகரைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
அத்துடன் நானாவ் (Nanao), சுஸு (Suzu) உட்பட பல இடங்களில் கட்டடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்ததுடன் சாலைகளும் சேதமடைந்தன.
இதனையடுத்து மீட்புக் குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் , மோசமான சேதம் நேர்ந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.