நேபாள விமான விபத்தில் பிரித்தானியருக்கு நேர்ந்த கதி!
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒரு பிரித்தானியரும் ஒருவர் அடங்குவார்.
நேபாள அதிகாரிகள் ஆரம்பத்தில் Ruan Calum Crighton என்பவரை அயர்லாந்து குடியரசைச் சேர்ந்தவர் என்று கூறினர் - ஆனால் பிரித்தானியா அரசாங்கம் அவர் பிரித்தானியர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் இறந்த பிரித்தானியரின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். எனவும் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார். எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏடிஆர் விமானம் 72 பேருடன் பயணித்த போது ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விபத்தில் 72 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Crighton உடன் நேபாளம், இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
விமானத்தின் கறுப்புப் பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவு ஆகிய இரண்டும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, பதிவுகளில் உள்ள தரவுகளை புலனாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள்.
விமானம் தரையிறங்க முயற்சித்த பிறகு, காற்றில் பயங்கரமாகச் சுழன்றதைக் கண்டதாகக் கவுரவ் குருங் என்பவர் கூறினார்.
விமானம் அதன் இடது பக்கம் முதலில் சாய்ந்து விழுந்து பின்னர் பள்ளத்தாக்கில் விழுந்ததைக் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்திற்குப் பிறகு விமானம் தீப்பிடித்தது. எங்கும் புகை இருந்தது, என குருங் கூறினார்.