தனது குழந்தைகளுக்கு எமனான தாயிக்கு நேர்ந்த கதி!
அதிகளவு வெப்பநிலையுடன் காணப்பட்ட காரில் தனது குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தாய்க்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்பது வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
காருக்குள் வெப்பநிலை 60 செல்சியசாக காணப்பட்ட நிலையில் தனது குழந்தைகளை ஒன்பது மணிநேரம் விட்டுச்சென்ற லோகனை சேர்ந்த தாய்க்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
இரண்டரை வயது டார்சே மற்றும் 13 மாத சோலே ஆன் இருவரையும் தாயார் காருக்குள் விட்டுச்சென்றதால் அவர்கள் உயிரிழந்தனர். 2019 ம் ஆண்டு இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட தாயார் ஏற்கனவே மூன்று வருடகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளார்.
அவ்வேளை அவர் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது அந்த சட்டம் மனித வாழ்க்கை குறித்து பொறுப்பற்ற அலட்சியத்தை உள்வாங்கும் விதத்தில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.