பொய்யான தகவல்களை வெளியிட்ட ரஷ்ய ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி!
ரஷ்ய ஊடகவியலாளர் மரியா பொனோமரேன்கோவுக்கு 6 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக மரியா தெரிவித்த கருத்துக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அரசின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
ரஷ்நியூஸ் எனும் இணயத்தளத்துக்காக, சைபீரிய பிராந்தியத்திலுள்ள பார்னோல் நகரிலிருந்து மரியா பணியாற்றி வந்தார். அந்நகரிலுள்ள நீதிமன்றமே மரியாவுக்கு 6 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தள்ளது.
இதன்படி கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரேனின் மரியுபோல் நகரிலுள்ள திரையரங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வெளியிட்ட பதிவுக்காக மரியாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது
இத்தாக்குதலில் நூற்றுக்கண்ககான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணம் என உக்ரேனும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் குற்றம் சுமத்துகின்றன. எனினும் இக்குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்திருந்தது.