கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
கனடாவின் ஹாமில்டன் நகரில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஹாமில்டனில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதான ஹாமில்டன் நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஏடிவியை ஓட்டிச் சென்றபோது, வாகனம் ஒன்பது மீட்டர் ஆழமுள்ள குளத்தில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எட்டு வயது சிறுமி மற்றும் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.
இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பதாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாலை 4 மணிக்குப் பிறகு குழந்தைகளைக் கண்டுபிடித்து மீட்க முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.