பிறந்து 7 நாளேயான குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை
பிறந்து 7 நாளேயான குழந்தையை பெற்ற தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாசெப்.
இவர் தனக்கு முதல் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் பிறந்து 7 நாளேயான பச்சிளம் குழந்தையை கொடூரமாக சுட்டு கொன்றுள்ளார்.
குழந்தையை 5 முறை சுட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இறந்த குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் ஐஜி, பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த கொடூர தந்தையை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.