அமெரிக்காவில் 2026 இல் தூக்கிலிடப்பட்ட முதல் நபர்
அமெரிக்காவில் இந்த ஆண்டு முதன்முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
55 வயது சார்ல்ஸ் தாம்சனுக்கு (Charles Thompson) ஹன்ட்ஸ்வில்லே (Huntsville) நகரத்தில் உள்ள சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டெக்ஸஸ் (Texas) மாநிலத்தின் குற்றவியல் நீதித்துறை தெரிவித்தது.

காதலர்கள் கொலை
1998இல் தன்னுடைய முன்னாள் காதலியையும் அவரது காதலரையும் கொலை செய்த குற்றத்திற்காக தாம்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
டென்னிஸ் ஹேஸ்லிப் (Dennise Hayslip) எனும் பெண்ணுக்கு அப்போது 39 வயது. அவரது காதலன் டேரன் கெய்னுக்கு (Darren Cain) 30 வயது.
ஹூஸ்டன் (Houston) நகர்ப்புறத்தில் உள்ள ஹேஸ்லிப்பின் வீட்டில் அவர்கள் தாம்சனால் சுடப்பட்ட நிலையில் கெய்ன் அங்கேயே உயிரிழந்தார் ஹேஸ்லிப் ஒரு வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.
அதேவேளை கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், 2009க்குப் பிறகு ஆக அதிகமான எண்ணிக்கை இது என கூறப்படுகின்றது.