இஸ்ரேலில் முதல் போலியோ தொற்று கண்டுபிடிப்பு
இஸ்ரேலில் 1989-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் போலியோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் 4 வயது குழந்தைக்கு போலியோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி அந்த நாட்டில் கடந்த 1989-ம் ஆண்டுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ள முதல் போலியோ தொற்று இதுவாகும்.
இந்நிலையில் இஸ்ரேலில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை அந்த குழந்தை செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேமின் வட்டார சுகாதாரத்துறை ஆணையம் இதுகுறித்த தொற்றுநோயியல் ஆய்வை தொடங்கியுள்ளது.
மேலும் அந்த குழந்தையையும் குழந்தையின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த தொற்றுக்கு காரணம் போலியோ வைரசின் புதிய திரிபு என்றும் போலியோ தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தாக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.