அமெரிக்கா தேர்தலில் களமிறங்கும் முன்னாள் தூதுவர்!
ஐநாவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் நிக்கிஹேலே 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பின்வாங்குவதற்கான நேரம் இதுவல்ல வலுவான பெருமைமிக்க அமெரிக்காவிற்கான தருணம் இதுவென அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடியரசுக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே அதே கட்சியை சேர்ந்த நிக்கி ஹேலேயும் இதனை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் டிரம்பிற்கு சவால்விடப்போவதில்லை என முன்னர் தெரிவித்திருந்த நிக்கிஹேலே எனினும் தலைமுறை மாற்றங்களை கருத்தில்கொண்டு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் மீது டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலிற்கு ஹேலே டிரம்பை கண்டித்திருந்தார். அவரது செயல்கள் வரலாற்றினால் மோசமாக மதிப்பிடப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
குடியரசுக்கட்சியின் ரொன் டிசான்டிஸ் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.