பிரான்ஸில் மூவரின் உயிரை பறித்த விளையாட்டு!
பிரான்ஸில் Var மாவட்டத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட ஒருவர் பலியாகியுள்ளதுடன், கடந்த ஒருவாரத்தில் இடம்பெறும் மூன்றாவது உயிரிழப்புச் சம்பவம் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Vars (Haute-Alpes) மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில் பனிச்சறுக்கில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 55 வயதுடைய பனிச்சறுக்கு வீரர் ஒருவர் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பனிக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் இடம்பெறும் மூன்றாவது உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.
கடந்த திங்கட்கிழமை Enchastrayes (Alpes-de-Haute-Provence) நகரில் ஒருவரும் புதன்கிழமை Pic Blanc du Galibier (Savoie) பகுதியில் ஒருவரும் பனியில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.
“அதிக பனிப்பொழிவு காரணமாக பனிச்சறுக்கு விளையாட்டு பரிந்துரைக்கப்படவில்லை. ஆபத்தில் முடியலாம்!” என Météo France எச்சரிக்கை விடுத்துள்ளது.
Haute-Alpes மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் 30 தொடக்கம் 50 செ. மீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.