அரச அதிகாரிகளின் கையை கடித்த யுவதி
அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்த 21 வயதான ஆஷ்லி சலட்ஸ் எனும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கெனக்டிகட் மாநிலத்தின் நவ்கேடுக் நகரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அதிகாலை 2.00 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
சந்தேக நபரான யுவதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்த நிலையில் அந்த யுவதியிடம் பொலிஸார் விசாரிணை மேற்கொண்டுள்ளனர்.
போதையிலிருந்த அந்த யுவதி, மேற்படி வீடு தனது நண்பர் ஒருவருடையது எனவும், குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மதுபானத்தை எடுத்து அருந்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வீட்டுக்குள் ஆஷ்லி பலவந்தமாக புகுந்த நிலையில், வீட்டின் கதவு, ஜன்னல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு ஒத்துழைக்க மறுத்த ஆஷ்லி, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையையும் சிகிச்சை அளித்த உத்தியோகத்தர் ஒருவரின் கையையும் கடித்தார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பின்னர், மருத்துவசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட ஆஷ்லி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, திருட்டு, அரச அதிகாரி ஒருவரை தாக்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவலை கிடைக்கப் பெற்றுள்ளது.