பிரான்ஸில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!
பிரான்ஸில் குடும்ப வன்முறை காரணமாக 34 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் புறநகர் பகுதியான Bondy இல் இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காலை 6.20 மணி அளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, rue Roger Salengro வீதியில் உள்ள வீடொன்றுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 34 வயதுடைய பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக அவர் மீட்கப்பட்டு பரிசில் உள்ள Pitié Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தைத் தொடந்து கொல்லப்பட்ட பெண்ணின் 37 வயதுடைய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் கொல்லப்பட்ட பெண் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.