கனடாவை அதிரவைத்த சம்பவம்; சந்தேக நபர் சடலமாக மீட்பு
கனடா சஸ்கட்சுவானில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான டேமியன் சாண்டர்சனின் (Damien Sanderson) உடல் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரண்டு சந்தேக நபர்களும் சகோதரர்கள் எனவும், மைல்ஸ் சாண்டர்சன் (Myles Sanderson) இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், ரெஜினா நகரில் இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறைச் செயல்களில் ஒன்றான 10 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தனர்.
டேமியனின் (Damien Sanderson) உடல் அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும் வீட்டிற்கு அருகாமையில் அதிக புல்வெளிகள் நிறைந்த பகுதியில் வெளியில் இருந்தது என பொலிஸ் உதவி கமிஷனர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்தார்.
உயிரிழந்த டேமியனின் (Damien Sanderson) உடல் காயங்களுடன் காணப்பட்டதாகவும், இந்த கட்டத்தில் அவை சுயமாக ஏற்படுத்தப்பட்டவை என்று நம்பப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் மற்றைய சந்தேக நபரான மைல்ஸ் (Myles Sanderson) இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.
அதோடு 30 வயதான சந்தேக நபர் காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம், மேலும் அவர் (Myles Sanderson) மருத்துவ உதவியை நாடக்கூடும் என்று பொலிசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
மேலும் மைல்ஸ் (Myles Sanderson) , குற்றங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முந்தைய விரிவான மற்றும் நீண்ட குற்றப் பதிவு கொண்டவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.