வித்தியாசமான முறையில் கடத்தப்பட்டபோதைப்பொருளை கைப்பற்றிய கனடா அதிகாரிகள்
கனேடிய நகரமொன்றில், கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கப்பல்களில் பார்சல்களை அனுப்பும்போது, அவை ஆடாமல் இருப்பதற்காக அவற்றை shipping pallets என்னும் மரம் அல்லது பிளாஸ்டிக்காலான ஸ்டாண்ட் மீது வைப்பார்கள்.
அந்த ஸ்டாண்டின் அடியிலுள்ள வெற்றிடங்களில் மறைத்துவைத்து போதைப்பொருளைக் கடத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவம் வான்கூவர் துறைமுகத்தில் நடந்துள்ளது.
image - Ben Nelms/CBC
அந்த shipping palletsகளில் ஏதோ அசாதாரணமாக இருப்பதைக் கவனித்த அதிகாரிகள், எக்ஸ்ரே கருவிகள் மூலம் அவற்றை ஆராய்ந்துள்ளார்கள். அப்போதுதான், அவற்றின் அடியிலுள்ள வெற்றிடங்களில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அவ்வகையில், 247 பார்சல்களில் 2,486 கிலோ ஓபியம் என்னும் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 50 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
image - Ben Nelms/CBC