மனித இனத்தின் கடைசி புகைப்படம்
ஒருவர் DALL-E 2 என்ற AI இமேஜ் ஜெனரேட்டரிடம் (செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence) தொழில்நுட்பத்திடம் பூமியின் முடிவில் மனிதன் எடுக்கும் கடைசி செல்பி எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு அது கொடுத்த பதில் அச்சுறுத்தும் வகையிலிருந்துள்ளது. அதற்கு அது ஒரு சில புகைப்படங்களை வழங்கியுள்ளது.
அதனை டிஃடாக் செயலியில் Robot Overloads என்ற கணக்கில் ஒரு நபர் AI கணித்த பூமியின் கடைசி மனிதனின் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.. அதனைக் கண்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்குக் காரணம் அது மிகவும் அச்சுறுத்தும் வகையிலிருந்தது. அதனை தொடர்ந்து "படத்தில் தெரிகிற மனிதன் என்று சொல்லப்படுகிற உருவம் ஏதோ ஏலியனைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. பின்னால் தெரியும் இடமோ ஒரே புகையாக எரிந்து கொண்டு போர் இடம் போல் காட்சியளிக்கிறது. ரத்த கோலத்தில் கண்கள் பிதுங்கி எலும்பாக அடையாளம் தெரியாத வகையில் மனித இனம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது."
மிகவும் கொடூரமாக இருந்த அந்த புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் பூமி போன்ற ஒரு கிரகம் தெரிக்கிறது.
அதை வைத்து சிலர் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்றும், சிலர் மனித இனமே இல்லாமல் அழிவிற்குச் சென்றிருப்போம் என்றும் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுகின்றனர்.
AI கணிப்பு தவறுதலாக இருக்கக்கூடும் ஆனால் அது தற்போதைய நிலைமையையும் செயல்களையும் வைத்துத்தான் கணித்துள்ளது. மனிதன் செய்யும் இயற்கைக்குப் புறம்பான செயல்கள் நீடித்தால் இது உண்மையாக மாறக் கூட வாய்ப்புள்ளது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.