பிரிட்டனில் முடியாட்சி எதிர்ப்பு குழுவின் தலைவர் கைது!
பிரிட்டனில் முடியாட்சியை எதிர்க்கும் குழுவின் தலைவர்கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெறவுள்ள முடிசூட்டும் நிகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னர் சார்ல்ஸின் ஊர்வலபாதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ரிப்பப்ளிக்கின் தலைமைநிறைவேற்று அதிகாரி கிரஹாம் ஸ்மித் டிரபல்ஹார் , முடிசூட்டும் நிகழ்வு பிரதானமாக இடம்பெறும் டிரபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களிற்காக குளிர்பானங்கள் பதாகைகளை சேகரித்துக்கொண்டிருந்தவேளை பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
வான் ஒன்றின் பின்னால் நூற்றுக்கணக்கான பதாகைகளுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை ஸ்மித் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இன்றைய தினத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளப்போவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை டிரபல்கர் சதுக்கத்தில் மஞ்சள் டீசேர் அணிந்தவாறு வெள்ளை கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கும்மேற்பட்ட முடியாட்சி எதிர்பாளர்கள் காணப்படுகின்றனர்.