நாயால் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்; கண்டுக்கொள்ளாத பெண்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது.
இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிப்டில் அழைத்து சென்றுள்ளார்.
அந்த லிபிடில் ஏற்கனவே சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தனது இறங்கும் தளம் வருவதை அடுத்து, லிப்டின் கதவு அருகே வந்தான்.
அப்போது, அங்கிருந்த நாய் சீறிப்பாய்ந்து சிறுவனின் காலை கடித்துவிட்டது. இதனால் சிறுவன் வலியால் துடி துடித்து காலை உதறி கத்தினான்.
ग़ाज़ियाबाद : लिफ़्ट में महिला के साथ जा रहे कुत्ते ने बच्चे को काटा
— News24 (@news24tvchannel) September 6, 2022
◆राजनगर एक्सटेंशन की चार्म्स काउंटी सुसाइटी का वीडियो, माता-पिता की शिकायत पर पुलिस ने केस दर्ज किया pic.twitter.com/PMCQBogqxP
நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார்.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை கண்டுக்கொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.