புடினுக்கு எதிரான உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது; அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், நாடு கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இதேபோல், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிர் ஜோ பைடன், புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.