தனது வெற்றியை உக்ரைன் மக்களுக்கு சமர்ப்பித்த வீராங்கனை!
உக்ரைனின் டெனிஸ் வீராங்கனை தனது வெற்றியை போராடிக்கொண்டிருக்கும் மரணித்துக்கொண்டிருக்கும் மக்களிற்கு சமர்ப்பித்துள்ளார்.
ஏடிஎக்ஸ் ஓபனில் உக்ரைனின் மார்ட்டா கொஸ்டுயுக் என்ற வீராங்கனையே ரஸ்யாவின் வர்வரா கிரச்சேவா என்ற வீராங்கனையை தோற்கடித்துள்ளார்.
நான் தற்போதுள்ள நிலையில் இந்த வெற்றி மிக முக்கியமானது விசேடமானது என குறிப்பிட்டுள்ள அவர்,
நான் இந்த வெற்றியை உக்ரைனிற்கும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் உயிரிழந்து கொண்டிருப்பவர்களிற்கும் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மார்ட்டா கொஸ்டுயுக் , ரஸ்ய பெலாரஸ் வீராங்கனைகளை உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் இந்த தொடரில் அனுமதிப்பது குறித்து தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.