மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டுக் கொன்ற பொலிசார்!
அமெரிக்காவில் பொலிஸ் மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளியை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
14 வயது சிறுவனக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, கொள்ளையில் ஈடுபட்டது போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஜானி ரே ஜாமீன் கிடைத்ததும் தலைமறைவானான்.
அவனது பதுங்கிடம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் மோப்ப நாயுடன் அங்கு விரைந்தனர். புதர்கள் மண்டிய பகுதியில் பதுங்கியிருந்த ஜானி ரே-வை மோப்ப நாய் பிடிக்க முற்பட்டபோது அவர் அதனை துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
இந்நிலையில் மோப்ப நாயை பின்தொடர்ந்து வந்த பொலிசாரையும் அவர் சுட முற்பட்டபோது, பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.
மேலும் படுகாயமடைந்த மோப்ப நாய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.