பிரான்ஸில் குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பிய இராணுவ வீரரின் விபரீத முடிவு!
பிரான்ஸில் Lille நகரில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
அவர் தனது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Lille நகரில் அமைந்துள்ள முக முக்கியமான இராணுவத்தளமான Kléber முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்த 45 வயதுடைய அதிகாரி ஒருவர், கடந்த திங்கட்கிழமை நண்பகல் அவரது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், மிக நீண்ட மின்னஞ்சல் ஒன்றை தனது குடும்பத்தினருக்கு எழுதியிருந்ததாகவும், அது செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி அளவில் செல்லுமாறு நேரம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அதிகாரி அண்மையில் மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து நாட்டுக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.