கொடையாளர்களிடம் இருந்து நிதியுதவி கோரிய உக்ரேனிய அதிபர்!
அனைத்துலகக் கொடையாளர்களிடமிருந்து நிதியுதவி பெற உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யப் போரால் உக்ரேனில் தகர்த்தப்பட்டுள்ள வீடுகளையும் பள்ளிகளையும் மீண்டும் கட்ட அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு மொத்தமாக 55 பில்லியன் டாலர் தேவைப்படுவதாகத் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
அதில் 38 பில்லியன் டாலர் அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட பயன்படுத்தப்படும். மற்றுமொரு 17 பில்லியன் டாலர் முக்கிய உள்கட்டமைப்பைத் திரும்பக் கட்டத் தேவைப்படும்.
வீடமைப்பு, எரிசக்தி வசதிகள், பள்ளிகள் ஆகியவை அதில் அடங்கும்.
உலக வங்கி, அனைத்துலகப் பண நிதியம் ஆகியவற்றின் வருடாந்திரக் கூட்டத்தில் இணையம் வழியாகத் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.