உக்ரைனின் பாதுகாப்புக்காக உதவிய அமெரிக்கா!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்புக்காக ரூ.750 கோடியை அமெரிக்கா வழங்க உள்ளது.
ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைனிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகள் போல காட்சி அளிக்கின்றன.
இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்புக்கு 100 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.750 கோடி) அமெரிக்கா வழங்குகிறது.
இதையொட்டி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன்(Anthony Blingen) டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உக்ரைன் போரில் புடினின் கொடூரமான தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், உக்ரைனிய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பொலிஸ் படையினருக்கு கவச வாகனங்கள், உபகரணங்களை வாங்குவதை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு உதவியாக அமெரிக்கா கூடுதலாக 100 மில்லியன் டாலரை (சுமார் ரூ.750 கோடி) வழங்கும்” என்று கூறி உள்ளார்.