ரஷியாவுக்கு எதிராக போலந்தில் ஏவுகணை பேட்டரிகளை நிலைநிறுத்திய அமெரிக்கா
அமெரிக்கா போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பேட்டரிகளை நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பேட்டரிகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிலைநிறுத்துகிறது.
இந்த பேட்ரியாட் அமைப்பு ஆனது, ஜெர்மனியில் உள்ள ரைன் ஆர்ட்னன்ஸ் பாராக்ஸில் இருந்து வரும் தாக்குதல், அமெரிக்கப் படைகள் மீது ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் இடைமறிக்கவும் முடியும்.
மேலும் ரஷியா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது, மேலும் போர் போலந்து எல்லைகளை நெருங்கினால், பேட்ரியாட் அமைப்பு ரஷியாவின் ஏவுகனை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
ரஷியப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததால் நேட்டோவின் தடுப்புத் அரணை வலுப்படுத்த கடந்த மாதம் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவில் இருந்து சுமார் 4,700 வீரர்கள் போலந்துக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.