செங்கடல் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி
செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏடன் வளைகுடாவில், அமெரிக்கக் கொடியுடன், சென்ற எண்ணெய்க் கப்பலான MV Torm Thor ஐ குறிவைத்ததாக, ஹவுத்தி குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் Yahya Sarea தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.
ஏமனில் 18க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுததகிடங்குகள் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
U.S. Forces, Allies Conduct Joint Strikes in Yemen
— U.S. Central Command (@CENTCOM) February 24, 2024
On Feb. 24, at approximately 11:50 p.m. (Sanaa Yemen time), U.S. Central Command forces alongside UK Armed Forces, and with support from Australia, Bahrain, Canada, Denmark, the Netherlands, and New Zealand, conducted strikes… pic.twitter.com/hAQ8Ftkihp