உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்; முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற பிரபல கடன் வழங்கும் சர்வதேச நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா
இந்த பாஸ்போர்ட் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் பெற்றுள்ளது. தொடர்ந்து 7வது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து வருகிறது.
சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. அதேவேளை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இந்த நாடுகள் சரிவைச் சந்தித்தன.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 67-வது இடத்திலும் , இலங்கை 84வது இடத்திலும், பாகிஸ்தான் 91வது இடத்திலும் உள்ளன.