தாயை ஏமாற்றிய மகளின் மோசமான செயல்!
பிரேசிலில் தாயை ஏமாற்றி அவரிடமிருந்து 145 மில்லியன் டாலர் மதிப்பிலான ஓவியங்கள், நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பெற்ற மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு உடல்நலமில்லை என்றும் தன்னைக் குணப்படுத்தும் சக்தி கொண்ட ஒரு பெண்ணைப் பணியமர்த்துமாறும் கூறி அந்த மகள் தனது தாயை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
அதற்காக அந்தத் தாய் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை 970,000 டாலர் செலவு செய்தார். பின் சந்தேகம் எழுந்ததால் அவர் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்.
அதனால் மகளும் அவருடன் மோசடியில் ஈடுபட்ட சிலரும் சேர்ந்து அந்தத் தாயை மிரட்டவும் தாக்கவும் தொடங்கியதாகக் தெரியவந்துள்ளது.
சுமார் ஓராண்டுக்குத் தாயை வீட்டிலேயே தனிமைப்படுத்தியதோடு வீட்டிலிருந்த அவருக்குச் சொந்தமான கலைப்பொருள்களையும் நகைகளையும் அவர்கள் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி திருடப்பட்ட ஓவியங்களில் சில அருங்காட்சியகங்களுக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.