செவ்வாய் கிரகத்தில் வேற்றுக் கிரகவாசி பாறையா? நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி
செவ்வாய் கிரகத்தில் ஒரு அரிய வேற்றுக் கிரகவாசி பாறையை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது செவ்வாய் கிரகத்தில் உள்ள மற்ற பாறைகளில் இருந்து சற்று வித்தியாசமானது.
இதன் மூலம், இந்த பாறை செவ்வாய் கிரகத்திற்கு எவ்வாறு வந்தது என்பது குறித்து, நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

நாசா பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் பல சோதனைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஒரு மர்மமான பாறையைக் கண்டுபிடித்தது. அங்குள்ள இயற்கை வளங்களுடன் ஒப்பிடும் போது, இந்தப் பாறை சற்று வித்தியாசமாக இருப்பதை நாசா கவனித்து உள்ளது.
சுமார் 80 சென்டி மீட்டர் நீளம் கொண்ட இந்தக் பாறைக்கு நாசா விஞ்ஞானிகள் 'ஃபிப்சாக்ஸ்லா' என்று பெயரிட்டு உள்ளனர். இந்த பாறை செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வேற்றுக் கிரகவாசி பாறை என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பாறையில் அதிக அளவு நிக்கல் மற்றும் இரும்புத் தனிமங்கள் இருப்பதாக நாசா கண்டறிந்து உள்ளது. இதன் மூலம் இந்தப் பாறை சூரிய மண்டலத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

நாசா அனுப்பிய ரோவர் முன்பு லெபவான் விண்கல் மற்றும் காகோ விண்கல்லை அடையாளம் கண்டு உள்ளது. அதன் பிறகு, இப்போது மர்மமான பாறையை அடையாளம் கண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு அரிய வகை பாறை என்றும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா? பூமிக்கு எடுத்துக் கொண்டு வரலாமா? என்பது போன்ற பல கேள்விகள் நாசா விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்து உள்ளன.
கூடிய விரைவில் அதற்கான தீர்வுகளும், அவர்களின் ஆராய்ச்சியின் முடிவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.