இன்னும் இரண்டு வருடங்களே இருப்பார்; புடின் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரஷ்யா அதிபர் புடின்(Vladimir Putin) இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க மாட்டார் என டிராகன்ஃபிளை கணித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளாடிமிர் புடின் (Vladimir Putin)ரஷ்யாவின் அரசியல் பிரச்சனைக்கு மத்தியில் முதல் முறையாக டிசம்பர் 1999 முதல் மே 2000 தற்காலிக அதிபராக இருந்த புடின் , மே 2000 முதல் மே 2008 மீண்டும் அதிபரானார்.
இதன் பின்பு மே 2012 முதல் ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின்(Vladimir Putin) இருக்கிறார். ஆதிக்கம் இதற்கு முன்பு ஆகஸ்ட் 1999 - மே 2000 மற்றும் மே 2008 - மே 2012 என இரு முறை ரஷ்யாவின் பிரதமராக இருந்தார்.
இதன் முன் ரஷ்ய பாதுகாப்புத் துறையில் பல பரிவில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார் விளாடிமிர் புடின்(Vladimir Putin).
இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள காரணத்தால் ரஷ்யாவில் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்தால், புடின்(Vladimir Putin) இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க மாட்டார் என்று டிராகன்ஃபிளை கணித்துள்ளது.
அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய 3 பெரிய வல்லரசு நாடுகளும் கடுமையான தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளதன் மூலம் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் நிதி நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் இதே வேளையில் ரஷ்யா தனது வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தப் பல புதிய திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. இதனால் நிதி நெருக்கடி போன்ற மோசமான பிரச்சனைகள் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா, சீனா இதேபோல் புடின்(Vladimir Putin) ஆட்சியை இழந்தால் புதிய அதிபரால் உலக நாடுகளின் தடை எதிர்த்து ரஷ்யாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர முடியுமா என்பது கேள்விக்குறி தான்.
இதேவேளை சீனாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது, அதாவது ஜி ஜின்பிங்(Xi Jinping) அதிபர் பதவியில் இருந்த மார்ச் 2023ல் விலகுகிறார் எனவும் டிராகன்ஃபிளை கணித்துள்ளமை பரபரப்பாக பேசப்படுகின்றது.