பிரித்தானியாவில் 60 நொடிகளில் 5 சொகுசு கார்கள் திருடிய திருடர்கள்!
பிரித்தானியாவில் திருடர்களால் வெறும் 60 நொடிகளில் ரூ.31 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐந்து சொகுசு கார்கள் திருடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில், கடந்த நவம்பர் 11ம் திகதி 4.44 மணியளவில், ஒரு குழுவாக வந்த கொள்ளையர்கள், போர்ஷ், ஏரியல் ஆட்டம் போன்ற ஐந்து சொகுசு மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடிச்சென்றுள்ளனர்.
திருட்டுப்போன கார்களின் மொத்த மதிப்பு சுமார் 7,00,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.31.5 கோடி) என கூறப்படுகிறது.
We are currently investigating an incident where multiple luxury cars were stolen from a unit on Brentwood Road in #Bulphan on 11 November.
— Essex Police (@EssexPoliceUK) December 5, 2022
Did you witness anything suspicious? If so, please contact us. pic.twitter.com/2huktS0PJI
இந்நிலையில் கார்கள் திருடப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எசெக்ஸ் காவல்துறையின் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட 1 நிமிடம் 15 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில், 60 வினாடிகளுக்குள் விலை உயர்ந்த கார்களை திருடர்கள் திருடுவதைக் காட்டுகிறது.
சொகுசு கார்கள் திருடப்பட்ட சம்பவத்தை தற்போது விசாரித்து வருவதாகவும், யாரேனும் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதாவது கண்டிருந்தால், தங்களை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
திருடப்பட்ட கார்களில், ஒரு அரிய ஏரியல் ஆட்டம் (Ariel Atom) பந்தய கார், ஒரு Mercedes-Benz A45 AMG 4matic, ஒரு Porsche Cayenne, ஒரு Porsche 911 Carrera, மற்றும் Mercedes Maybach ஆகியவை அடங்கும்.தற்போது, அதிலிருந்து Mercedes Maybach காரை மட்டும் மீட்டுள்ள பொலிஸார் இன்னும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.