கனடாவில் கொல்லப்பட்டு வரும் ஓநாய்கள்! ஏன் தெரியுமா?
கனடாவின் ஒன்றாரியோவிற்கும் நயகராவிற்கும் இடையில் அமைந்துள்ள புர்லிங்டன் (Burlington) என்னும் நகரத்தில் சில வார இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று ஓநாய்கள் கொல்லப்பட்டுள்ளன.
மனிதர்கள் மீது இந்த ஓநாய்கள் தாக்குதல் நடத்தி வந்த காரணத்தினால் இவை கொல்லப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த ஓநாய்கள் கொல்லப்பட்டுள்ளன வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஓநாய் கொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதேசத்தில் மனிதர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த இரண்டு ஓநாய்கள் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மற்றும் ஒரு ஓநாய் கொல்லப்பட்டுள்ளது.
கடந்த 10 மற்றும் 17ஆம் திகதிகளில் ஓநாய்களினால் தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களுடன் கொல்லப்பட்ட ஓநாய்க்கு தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களில் பிரதேசத்தில் ஓநாய்களினால் ஏற்பட்ட தொல்லைக்கு முடிவு கட்டுப்பட்டு விட்டதாக தாங்கள் கருதுவதாக புர்லிங்டன் மேயர் மேரியன் மீட் வார்ட் ( Marianne Meed Ward) தெரிவித்துள்ளார்.
நகரின் மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் மக்கள் உணவு கழிவுகளை அகற்றும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உணவு கழிவுகளை கண்ட இடத்திலும் போடுவதனால் இவ்வாறு ஓநாய்கள் ஊருக்குள் வரும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உணவு கழிவுகள் கிரமமாக அகற்றப்பட வேண்டும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் சுமார் ஏழு பேர் ஓநாய்களின் தாக்குதல்களுக்கு இலக்காகமடைந்திருந்தனர்.