கனடிய விமான பயணிகள் எதிர்நோக்கி வரும் சவால்
கனடாவின் விமான பயணிகள் பலரின் பயணப் பொதிகள் தொலைந்து போகும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் போது அதிக எண்ணிக்கையிலான விமான பயணிகள் தங்களது பயணப் பொதிகளை தொலைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக 32 விதமான கனேடிய விமான பயணிகள் இவ்வாறு தங்களது பயணப் பொதிகளை தொலைத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சுமார் ஆறு தசம் ஏழு விதமான பயணப் பொதிகள் மீண்டும் கிடைக்கப் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கனடாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பயணப் பொதிகள் காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போகும் பயண பகுதிகள் தொடர்பில் நட்ட ஈடு வழங்குவதில் கனடிய விமான சேவை நிறுவனங்கள் சிறந்த முறையில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.