போரை முடிவுக்கு கொண்டுவர இதுதான் ஒரே வழி ; உக்ரைன் அதிபர்
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாதிமீா் புடினை(Vladimir Putin) நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மூன்று வாரங்களைக் கடந்துள்ளது. உக்ரைன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இரு நாட்டு அதிபர்களிடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாதிமீா் புடினை(Vladimir Putin)நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) வலியுறுத்தியுள்ளார்.
போரை நிறுத்துவதற்கு அவர்கள் எதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த சந்திப்பு இன்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என உக்ரைன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் புடினை நேரில் சந்தித்துப் பேசாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.